2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தவறவிட்ட அழைப்பில் இழந்தான் இளைஞன்

George   / 2016 பெப்ரவரி 10 , பி.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞனுடன் அலைபேசியில் உரையாடி காதல் உறவை ஏற்படுத்தித் தன்னை கிராம சேவகர் எனக் காட்டிக்கொண்டு அவரிடமிருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மோசடி செய்த யுவதியொருவர் மற்றும் அவருக்கு உதவிபுரிந்த மற்றுமொரு பெண் ஆகிய இருவரைக் கைதுசெய்வதற்காக அநுராதபுர  பொலிஸ் தலைமையக பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

அநுராதபுரம், ஜயந்தி மாவத்தையில் உள்ள பிரசித்திபெற்ற விடுமுறை விடுதியில் வேலை பார்க்கும் 25 வயதுடைய இளைஞன் செய்த முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுப்பட்ட இரண்டு பெண்களும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும், அவர்களது வயது தொடர்பில் சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

முறைப்பாட்டாளரான இளைஞனுக்கு, 5 மாதங்களுக்கு முன்னர் கிடைத்த தவறவிட்ட அழைப்பிலேயே 
(மிஸ்ட் கோல்) இருவருக்குமிடையில் இந்தக் காதல் மலர்ந்துள்ளதாக
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X