2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தவிசாளரை நிறுத்த இ.தொ.கா தீர்மானம்

Kogilavani   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்   

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டதாலேயே அவருக்கு எதிராக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்கச் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர், தற்போது ஹம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் அவர் குணமடைந்து வந்ததும் அவரிடம் விளக்கம் கோரப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் காங்கிரஸின் பொதுச்செயலாளர் தெரிவித்தார். 

பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதன் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே, அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் பொதுநிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் இந்நிகழ்வுகளில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X