2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

திஸ்ஸமஹாராம பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் மரணம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

திஸ்ஸமஹாராம முதியம்மான பகுதியில் இன்று (26) மாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 58 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரிக்கும் உயிரிழந்தவரின் மகனின் மனைவிக்கும் இடையிலான உறவின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .