2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’தாழமுக்கம் காரணமாக காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்’

Amirthapriya   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அராபியக் கடல் பிராந்தியத்தில் வலுவான தாழமுக்கமாக (Deep Depression) நேற்று (08) சூறாவளியாக உருமாறிய லுவான் சூறாவளியானது, தற்பொழுது தென்மேற்கு அராபிய கடல்பிராந்தியத்திலிருந்து மணிக்கு 7 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துகொண்டிருப்பதாக, வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி, க.சூரியகுமாரன் தெரிவித்தார்.

இது ஓமான் நாட்டின் சலசா பிரதேசத்திலிருந்து கிழக்கு – தென்கிழக்காக 800 மீற்றர் தூரத்திலும் யெமன் நாட்டின் சொகட்டா தீவிலிருந்து கிழக்காக 680 கிலோமீற்றர் தூரத்திலும் யெமன் நாட்டின் அல் – கைடா பிரதேசத்திலிருந்து கிழக்கு – தென்கிழக்காக 940 கிலோமிற்றர் தூரத்திலும் தற்பொழுது காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்துவரும் 5 நாட்களில் யெமன் நாட்டிற்கும் ஓமான் நாட்டின் தென்கரையோர பிரதேசத்திற்கும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதோடு, இதேவேளை வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள வலுவடைந்த தாழமுக்கமானது, கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து தற்பொழுது இந்தியா – ஒரிஸா மாநிலத்தின் கோபால்பூர் பிரதேசத்திலிருந்து, தென்கிழக்காக 560 கிலோமீற்றர் தூரத்திலும் ஆந்திர பிரதேசத்தின் கலிங்கப்பட்டணத்திலிருந்து தென்கிழக்காக 510 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகிறது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் ஒரிஸா மாநிலத்தையும் வடஆந்திராவையும்  நோக்கி நகர்ந்து, எதிர்வரும் 11 ஆம் திகதி கோல்பூரிற்கும் கலிங்கப்பட்டணத்துக்கும் இடையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலும் கூறினார்.

அத்துடன் இலங்கையில், மன்னாரிலிருந்து பொத்துவில், புத்தளம், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் கடற்பிராந்தியங்களிலிருந்து மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனத் தெரிவித்ததோடு, கடல்சார் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .