Editorial / 2019 ஜூலை 03 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
திரிபோஷா உற்பத்திக்கு அவசியமான சோயா, போஞ்சி தானிய வகைகளை எஸ்.டி.கே யுனைட்டட் எக்ரி வென்சர்ஸ் தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ.840 மில்லியனுக்குப் இறக்குமதி செய்து பெற்றுக்கொள்ள அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மந்தபோசணை குறைபாடுடைய குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆகியோருக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் போசணை நிறைந்த உணவான இந்த திரிபோஷாவை தொடர்ந்தும் வழங்குவதற்கு, இலங்கை திரிபோஷா சங்கம் 6,000 மெட்ரிக் தொன் போஞ்சியை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளது.
அத்துடன் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன இதற்கு அமைச்சரவையில் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
2 hours ago