2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

திருமணத்துக்கு புறம்பான உறவு: மூவருக்கு கத்தி வெட்டு

Editorial   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை சொய்சா வீதியிலுள்ள வீடொன்றுக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்து ஒருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கத்தியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் தந்தை, தாய், மகள் காயமடைந்தனர். சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் கத்தியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.   திருமணத்திற்கு புறம்பான உறவால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X