2025 ஜூலை 05, சனிக்கிழமை

தீயில் சிக்கிய ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஜனவரி 08 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி – யட்டிநுவர வீதியில் ஐந்துமாடி கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தில் சிறுவர்கள் முதல் சிலர் இருந்ததாகவும் எனினும் அவர்கள் சிறுயங்களுடன் காப்பற்றப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தப் பொலிஸார், தற்பொழுது தீயணைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.

குறித்த கட்டடத்தின் மூன்றாவது மாடியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினரின் உதவியோடு தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும மேலும் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில்,

காமநாதன் ராமராஜா (வயது 36), தங்கவேலு ராதிக்கா (வயது 32), காமநாதன் நிசாலன் (வயது 08), காமநாதன் சத்யஜித் (வயது 07), மற்றும் காமநாதன் சஹித்தியன் (வயது 03) ஆகியோரே காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .