2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தீர்த்தமாடியோரை தேடும்பணி தீவிரம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி, தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்ட அடியார்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்காக, சுகாதார தரப்பினர் பொலிஸாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாரசிங்க, இன்று (09) இடம்பெற்ற மண்முனை வடக்கு பிரதேச கொவிட் செயலணி கூட்டத்தில் தெரிவித்தார். 

ஆலயத்தை 14 நாட்கள் பூட்டுவதாகவும் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாகவும்  நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் உற்சவத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்றையதினம் சுகாதார சுற்று நிருபத்தை மீறி வருடாந்த தீர்த்தோற்சவத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதையடுத்து தேசிய ரீதியில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இருந்தபோதும், இந்த ஆலய உற்சவத்துக்கு கடந்த  கொரோனா செயலணி கூட்டத்தில் 100 பேருக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் அனுமதியையும் சுகாதார சுற்று நிருபத்தை மீறி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இடம்பெற்ற இச் சம்பவமானது பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ். குமார், வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X