2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

தீர்வு கிடைக்காவிட்டால் 18ஆம் திகதி பஸ் ஓடாது

S. Shivany   / 2021 ஜனவரி 07 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காத பட்சத்தில், எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தனியார் பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளபோதிலும், இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என, அகில இலங்கை தனியார் பஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, 15 திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்காவிடின் 18 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .