Freelancer / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெட்டிபொல - மகுலாகம பகுதியில் இன்று (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 9 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். அவரது பாட்டி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமி ஹெட்டிபொல, மகுலாகம பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், இறந்த சிறுமி தனது பாட்டியுடன் வீட்டில் தங்கியிருந்தபோது, அருகில் இருந்த சிலர் பன்றிகளை வேட்டையாடும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த பாட்டி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமியின் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட போர 12 ரக துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025