2025 ஜூலை 07, திங்கட்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம்  பகுதியில் நேற்று  இரவு (27) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம்-மணல்குன்று பகுதியைச் சேர்ந்த, 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம்-கருவலகஸ்வெவ மீஓயா காட்டுப்பகுதிக்குள் வைத்து சந்தேக நபர், விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து, துப்பாக்கி ஒன்றும், ஐந்து தோட்டாக்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கியை பயன்படுத்தி மிருகங்களை மாத்திரம் வேட்டையாடி வந்துள்ளதாக, சந்தேக நபர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .