Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், அதனை நிறைவேற்றுமாறு இன்று (11), உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு மனு, இன்று (11), பிற்பகல் 2.30 மணியளவில் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு, பிரதம நீதியரசர்களான பிரியசாத் டெப், புவனேக அலுவிகார, நலின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித மலல்கொட உள்ளிட்ட நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரத லக்ஷமன் உள்ளிட்ட நால்வர், கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி, முல்லேரியாவ பகுதியில் வைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
29 minute ago
2 hours ago