2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

துமிந்தவுக்கு எஸ்.பி குரல்

Editorial   / 2021 ஜனவரி 06 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனைக் கைதியான, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு  பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில், ஜனாதிபதி  உரிய  கவனம் செலுத்த வேண்டுமெனத்  தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க,  சிறைக்கைதிகளுக்குப்  பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஆகையால், துமிந்தவுக்கும் பொது மன்னிப்பு வழங்குவது சிறந்தது என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'பாரத  லக்ஷ்மன் கொலை வழக்கில்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.   துப்பாக்கிச் சூடுபட்டுஇ துமிந்தவும் கீழே விழுந்துள்ளார் எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்' என்றார். 

இதேவேளை, கொவிட்-19  நோய் தாக்கி மரணமடைவோரின் சடலங்களைத்  தகனம் செய்வதா, அடக்கம் செய்வதா என்பது தொடர்பில், தீர்மானிக்க வேண்டிய தேவை, அரசாங்கத்துக்குக் கிடையாது. ஏனெனில்,  கொவிட் -19 நோய் தாக்கி உயிரிழப்பவர்களின்  சடலங்கள்  தகனம் செய்யப்படுமென விசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டு,  நடைமுறையில் உள்ளது. நாட்டு மக்கள் அனைவரும்   அதையே ஏற்றுக் கொள்ள  வேண்டும் என்றார்.

கொவிட்-19  நோய்க்கு மத்தியில், மத உரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்க முடியாது.  சுகாதாரத் தரப்பினரது தீர்மானங்களுக்கு  முக்கியத்துவம் வழங்க வேண்டும் என, மதத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில், அரசாங்கம் சுகாதாரத் தரப்பினரது  தீர்மானத்துக்கே முன்னுரிமை வழங்கும் என்றார். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .