Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக, அதிக அந்நிய செலவாணிகளை ஈட்டிக் கொள்வதற்கான விசேட கலந்துரையாடல், கொழும்பிலுள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறைப் பிரதியமைச்சர் அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்றது.
ஒலுவில் துறைமுகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், திருகோணமலை துறைமுக அபிவிருத்தி ,சர்வதேச நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகள் உள்ளிட்ட துறைமுகங்களை அபிவிருத்திக்குப் பிரதானமாக இட்டுச் செல்லக் கூடிய வழிவகைகளையும் தேசிய கொள்கைத் திட்டமிடல் அமுலாக்கத்தை மேம்படுத்தல் போன்றன குறித்தும், இதன்போது கலந்துரையாடப்பட்டன.
எதிர்காலத்தில் துறைமுக அபிவிருத்திகள் ஊடாக, இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தல், சர்வதேச மட்டத்திலான உறவுகளை வலுப்படுத்துவதன் ஊடாக வருமான மீட்டல் எவ்வாறாக அமையப் பெறவேண்டும் என்பது மிக முக்கிய விடயமாகக் கொள்ளப்படுகிறன.
ஒலுவில் துறைமுகப் பிரச்சினைகளைத் தீர்த்து, சரியான முடிவுகளை விரைவில் முன்வைக்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் துறைமுகங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, துரிதமான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லப்படுமென, பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இதன்போது கூறினார்.
இக்கலந்துரையாடல், வர்த்தக வாணிப கைத்தொழில், கூட்டுறவுத் துறை நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரிஷாட் பதியுதீன், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் ஆகியோர்கள் தலைமையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சி இஸ்மாயில், துறைமுக அதிகார சபையின் பொறியியலாளர் நௌபர், அட்டாளைச் சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் அன்சில் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago