2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

தூதுவர் ஜூலி சங்கின் மலையக விஜயம்

Freelancer   / 2023 ஜூன் 05 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்துக்கான விஜயமொன்றை திங்கட்கிழமை (05) மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மலையக குடும்பங்களை சந்தித்தாக தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் தனது விஜயம் குறித்த புகைப்படங்களைப் பதிவிட்ட அவர்,  மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்திருந்தார்.
 
இதன்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது, மலைநாட்டு குடும்பங்களைச் சந்தித்ததாகவும் அவர்களில் பலர் 200 ஆண்டுகால பின்னணியை கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் தடைகள் பற்றியும் கேட்டறிந்ததாக  கூறியுள்ளார்.

மேலும் குறித்த மகளுக்கான சிறந்த வீடுகள், அந்த சமூகத்தின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி நேரடியாகக் கேட்டறிந்து கொண்டதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X