2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தேசிய சுவடிகள் திணைக்களம் மீது ஜனாதிபதி குற்றச்சாட்டு

Editorial   / 2019 ஜனவரி 31 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுவடிகள் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தொடர்பான பெறுமதிமிக்க ஆவணங்கள் அரசின் அனுமதியில்லாமல்  வெளிநாடொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாற தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கையிலுள்ள இளவயது பிக்குமார் சிலர் இலங்கையின் பௌத்த பாரம்பரியம் தொடர்பில், புத்தரின் பிறப்பு போன்றவைத் தொடர்பில், தவறான விளக்கங்களுடன் புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கின்றனர். இதன் பின்னணியில் நிதி வழங்கும் சிவில் அமைப்புக்கள் உள்ளன என்றுத் தெரிவித்துள்ளார்.
 

தேசிய சுவடிகள் திணைக்களத்தின் கொழும்பில் அமைந்துள்ள  தலைமையகத்தில் தான் இந்நாட்டின் வரலாற்று உரிமைகளான 1000 வருடங்கள் எம்மால் பாதுகாக்கப்பட வேண்டியதும், எவருக்கும் வழங்கக்கூடாததுமான ஆவணங்கள் காணப்படுகின்றன.

எனினும் கடந்த சில நாள்களில் குறித்த திணைக்களம் அரசின் அனுமதியில்லாமல், எந்தவொரு இணக்கப்பாடுமின்றி ஆவணங்களை வெளிநாடொன்றுக்கு வழங்கியுள்ளது. இந்நாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து அது தொடர்பான சகல விடயங்களையும் நகல் எடுத்துச் சென்றுள்ளனர்.

இது ஒரு புறம் பௌத்த சிந்தனைகளை திரிபுப்படுத்துவதற்கான வேலையாகவும் மறுபுறம் தேசிய சுவடிகள் திணைக்களத்தில் உள்ள எமது கலாசாரம், பாராம்பரியம் ஆகியவற்றினால் கட்டியெழுப்பப்பட்ட வரலாற்றை அழிக்கும் சதியென்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .