2025 ஜூலை 05, சனிக்கிழமை

தேயிலைத் துறையின் பிரச்சினைகள் குறித்து ஆராய ஜனாதிபதியல் குழு நியமனம்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் உள்ளடங்களாக தேயிலைத் தொழிற்றுறையின் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வை முன் வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலனியின்  பிரதானி எச்.எம்.பி. ஹிட்டிசேகர தலைமையிலேயே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சித், தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி. ஆர். ராஜபக்ஸ, திறைசேறியின் செயலாளர் ஆர். எஸ். எச். சமரதுங்க, தேயிலை சபையின் தலைவர் டபிள்யு. எல். பி. விஜேவர்தன, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் ஜே. விமலவீர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சிறு தேயிலைத் தோட்ட அதிகார சபையின் தலைவர், இலங்கை பெருந்தோட்டச் சங்கம், முதலாளிமார் சம்மேளனம், தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம், தேயிலை இடைத்தரகர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தேயிலைத் துறையை அண்மித்து காணப்படும் நீண்ட, குறுகிய பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதக் காலத்துக்குள் இந்தக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .