2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை முக்கிய சந்திப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை (04) இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்புக்கு கட்சியின் செயலாளர் அல்லது பிரதிநிதியொருவர் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த கலந்துரையாடலின்போது, தேர்தலுக்கான கட்டுப்பணம், பிரசார செலவுகள் மற்றும் தேர்தல் செலவு உள்ளிட்ட தேர்தல் விதிகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தேர்தல் சட்டம் தொடர்பில் இதற்கு முன்னர் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைய, இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .