2025 மே 05, திங்கட்கிழமை

தேர்தல் நடவடிக்கைகள் நாளை வரை இடைநிறுத்தம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி மன்றங்களில்  வியாழக்கிழமை (03) வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம், புதன்கிழமை (02) உத்தரவிட்டது.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை நீதிமன்றத்தில் சவால் செய்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் எம்.டி. முகமது லாஃபர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X