2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தேவாரம் பாடியவர் மரணம்

Editorial   / 2023 டிசெம்பர் 28 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

ஆலயமொன்றில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்தவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சி.இராசரத்தினம் (88) என்பவரே உயிரிழந்துள்ளார். 

தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு தினமும் சென்று தேவாரம் பாடிவரும் நிலையில்   புதன்கிழமையும் (27) வழமை போன்று ஆலயத்திற்கு சென்று தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார்,

அதனை அடுத்து அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X