2026 ஜனவரி 21, புதன்கிழமை

தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர் திடீரென கைது

Freelancer   / 2021 ஜூன் 19 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன்-  வட்டவளை, வெலிஓயா தோட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி,  ஒன்று கூடிய குற்றச்சாட்டில் 12 தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டத்தில் அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அத்தோட்டம் முடக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த 15ஆம் திகதியன்று அந்தத் தோட்டம் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

இதன்போது தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் சிலரை,  காரியாலயத்திற்குள் வைத்து பூட்டி தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கையை தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.

இந்த செயற்பாட்டுக்கு எதிராக, தோட்ட நிர்வாகம் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமையவே  சந்தேகத்தின் பேரில், 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய விசாரணைகள் இடம்பெறுவகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அனுமதியின்றி காரியாலயத்திற்குள் பிரவேசித்தமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை, நிர்வாகிகளை பணயக்கைதிகளாக வைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்றையதினம் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X