2025 மே 21, புதன்கிழமை

தாஜூதீனின் மரணம்; விபத்தல்ல: படுகொலை

Kanagaraj   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றகர் வீரர் மொஹமட் வசீம் தாஜூதீனின் மரணம், விபத்தொன்றினால் ஏற்பட்டது ஒன்றல்ல என்றும் அது படுகொலை என்றும் அவருடைய இறுதியான மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய மரணம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்தியர் அஜித் தென்னகோன் தலைமையிலான குழுவினர் தயாரித்த அறிக்கை, நீதிமன்றத்தில் நேற்று கையளிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற போது தாஜூதீனின், அந்த வாகனத்தை செலுத்தவில்லை என்றும் கொலைச்செய்யப்பட்டன் பின்னர் அவருடைய சடலம், அந்த காரின் சாரதி ஆசனத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

தாஜூதீனின் கழுத்து, பாதங்கள் மற்றும் நெஞ்சு ஆகிய இடங்களில் கடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .