2025 மே 22, வியாழக்கிழமை

தாஜுதீன் விவகாரம்: அவையில் பதற்றம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையையடுத்து அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பியான முஜிபூர் ரஹ்மான், உரையாற்றிக்கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலர் தாக்க முற்பட்டனர். இதனையடுத்தே அவையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை விவகாரத்தை மையப்படுத்தி அவர் உரையாற்றியதையடுத்தே அவையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.  

நாடாளுமன்றத்தில் எதிரணியின் பக்க ஆசனத்தில் இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பியான முஜிபூர் ரஹ்மான்இ உரையாற்றிக்கொண்டிருந்த போது, கூட்டு எதிரணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனையடுத்தே அவையில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .