2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாய் நிவாரணம்

George   / 2016 ஜூன் 02 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரண தொகையாக 2500 ரூபாய்  கிடைக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பொருளாதார முகாமை குழு கூட்டத்தின் போது, இந்த முடிவு எட்டப்பட்டதாக அந்தக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, நவீன் திசாநாயக்க மற்றும் திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கம் உட்பட அரச அதிகாரிகள்  இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் பின்வரும்  முடிவுகள் எடுக்கப்பட்டன.

1.   2016 ஏப்ரல் முதல் கணக்கெடுக்கப்பட்டு தோட்டத் தொழிலாளருக்கு ரூ. 2500 ரூபாய இடைக்கால நிவாரண கொடுப்பனவு புதிய கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும்வரை  வழங்கப்படும்.

2.   இதன் மூலம் தோட்டத் தொழிலாளருக்கான இன்றைய நாட்சம்பளம் ரூ. 620 உடன் ரூ. 100 மேலதிகமாக சேர்க்கப்பட்டு ரூ. 720 நாட்சம்பளம் வழங்கப்படும்.   

3.   இந்த மேலதிக தொகையை வழங்க, தோட்ட முகாமைத்துவ நிறுவனங்களுக்கு அரச வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து கொடுக்கப்படும். இந்த பொறுப்பு திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

4.   வெகு விரைவில் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, புதிய தொகை சம்பளமும், 2015 மார்ச் 31ம் திகதியிலிருந்து கணக்கெடுக்கப்பட்டு நிலுவை சம்பளமும் வழங்கப்படும்.  

5. கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை நடவடிக்கையை நேரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்நடத்துவார்.  

6.  விரைவில் தொழிலாளருக்கு பயிர் காணிகள் பிரித்து வழங்கும் புதிய தொழில் முறைமையான, வெளி ஒப்பந்த முறைமை பற்றிய பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துக்கும், அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட முகாமை நிறுவனங்களுக்கும் இடையில் ஆரம்பிக்கப்படும்.      

ஆகிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .