2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் பலி

George   / 2016 டிசெம்பர் 05 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொட, பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நேற்று (05) இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய தந்தை, 28 வயது தாய் மற்றும் 4 வயது மகன் ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட இடத்தில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி ரவைகள் என்பன காணப்படுவதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .