2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கியைத் தலையில் வைத்தாலும் தீர்ப்பை திருப்பேன்

Gavitha   / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் பிணை வழங்குமாறு கோரித் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுப்படி செய்த ஹோமாக நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க, 'என் தலையில் துப்பாக்கியை வைத்தாலும் நான், வழங்கிய தீர்ப்பை மாற்றமாட்டேன்' என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்குப் பிணை வழங்குமாறு கோரி, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.  

பிணை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுவில், பிணையைக் கோருவதற்குப் போதுமான காரணங்கள் எவையும் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதவான், அம்மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதையும் நிராகரித்தார்.

'என்னிடம் பிழையிருந்தால், உயரதிகாரிகளிடம் தெரிவிக்கவும். இந்த வழக்கு, என்னால் விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்றே நான் நினைக்கின்றேன். சட்டமா அதிபர் திணைக்களத்திடமும் ஆலோசனை கேட்டுள்ளேன். இந்த வழக்கின் அடுத்த தவணையின் போது, இதற்கான ஆலோசனை கிடைக்கும் என்று நான் நினைக்கின்றேன்' என்றார்.

காணாமல் போனதாகக் கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து, கடந்த 25ஆம் திகதியன்று ஏசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டே கைதுசெய்யப்பட்ட அவர், எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியல் உத்தரவின் பேரில், வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதன் பின்னர், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நீண்டகாலமாக இருக்கும் நோய்க்கு கடந்த சில நாட்களாக குளிசைகளை உட்கொள்ளாமையை அடுத்தே அவர், திடீரென நோய்வாய்ப்பட்டதாகவும் அதன் பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X