Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில், மரணதண்டனை தீர்ப்புக்குள்ளான தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமிந்த ரவி ஜயநாத் என்ற குற்றவாளி, கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து, இன்று வெள்ளிக்கிழமை (09) அதிகாலை, தும்பரையில் அமைந்துள்ள போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
பாதுகாப்பு நடவடிக்கையின் பிரகாரமே, அவரை போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றியதாக, பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி கொலை வழங்கின் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில், மரணதண்டனை தீர்ப்புக்குள்ளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவையும், போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றுவதென, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அத்தீர்மானத்தை சில தினங்களுக்கு தாமதப்படுத்துவதென, சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனராம்.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன் தொடர்புடைய, துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளுக்கும், நேற்றைய தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் ஐவரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago