2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

துமிந்தவின் வாழ்க்கைப் பயணத்தில் மாற்றம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனைக் கைதியாக, வெலிக்கடை சிறைச்சாலையின் சீ 3 சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வாழ்க்கைப் பயணம் மாற்றம் கண்டுள்ளதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் வாசிப்பதற்காக, வாரத்துக்கு இரண்டு புத்தகங்கள் வீதம், பகிர்ந்தளிக்கப்படுவது வழமை. அதனை, சிறைக்கைதிகள் விரும்பினால் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நடைமுறை, சிறைச்சாலைகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா, தற்போது, அப்புத்தகங்களைப் பெற்று தன்னுடைய வாசிப்புத் திறனை விருத்தி செய்து வருவதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, சிறைச்சாலையிலுள்ள ஏனைய கைதிகளும், அவர்களின் பெயர்களில் புத்தகங்களைப் பெற்று, அவற்றை துமிந்த சில்வாவுக்கு வழங்கி வருவதாகவும், இது தொடர்பில், சிறைச்சாலைக்குள் பரபரப்பாகப் பேசி வருவதாகவும், மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .