Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாநூ கார்த்திகேசு
தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக, பல்வேறான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளமையால் மார்ச் மாதம் நடத்தப்படவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் யாவும் தாமதமாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து சர்வதேசத்தை வெற்றிகொண்டு ள்ளமையால், ஜிஎஸ்பி பிளஸ் சலுகை, இலங்கைக்கு மீண்டும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,
'உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு, 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எல்லை நிர்ணயங்கள் ஆணைக்குழுவினால், ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் எல்லைகளை அடையாளப்படுத்த முடியாது' என்றார்.
இதனால், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், மார்ச் மாதம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்க முடியும்.
'ஐக்கிய நாடுகளின் சபையுடன் சர்வதேசத்துக்கான உறவு நீடிக்கப்படுகின்றமைக்குக் காரணம் பலம், சலுகைகள், வளங்கள் மாத்திரமன்றி, ஒரு நாடு மற்றைய நாட்டுடன் கொண்டுள்ள ஒத்துழைப்பும் ஒற்றுமையுமேயாகும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
'முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்திலும் நான், அமைச்சர் என்றவகையில் பல நாடுகளுக்குச் சென்று நட்புறவுகள், ஒத்துழைப்புக்கள் தொடர்பில் உரையாடினோம். அன்று அந்த அரசாங்கத்தினால் வெற்றி கொள்ள முடியாத சர்வதேச உறவினை, இந்த அரசாங்கம் வெற்றிக் கொண்டுள்ளது' என்றார்.
இந்நிலையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
எல்லை நிர்ணயம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்திருப்பதாகவும் அதனால், உரிய காலத்தில் தேர்தலை நடத்தமுடியாது என்றும் சிலர் கூறுகின்றனர். அது தவறாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீடுகள் 550 கிடைத்துள்ளன. அந்த சகல மேன்முறையீடுகளும் டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் ஆராயப்பட்டு, தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையாக திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago