2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தேர்தலை நடத்த 3 மாதங்கள் போதும்: மஹிந்த

Kanagaraj   / 2016 மே 02 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி கிடைக்குமாயின், தேர்தலை நடத்துவதற்கு மூன்று மாதங்கள் போதும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'தொகுதிவாரி முறை, முழுமையாக மாற்றப்பட்டுள்ளது என்பதனால், தேர்தலுக்கான அறிவிப்பை விடுவதற்கு அதிகாரமில்லை. அமைச்சரின் வர்த்தமானி அறிவித்தல் மற்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் மட்டுமே தேர்தலை நடத்தமுடியும்' என்றார்.

'தேர்தல் காலதாமதமடைவது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவை குறைகூறுவதில் எவ்விதமான  பிரயோசனமும் இல்லை' என்றும் அவர் கூறினார்.

இந்தத் தேர்தலானது புதிய முறைமையின் ஊடாக நடைபெறாமல் இருக்குமாயின். அவசரகாலச் சட்டம் இல்லாதிருக்கின்ற நிலையில், உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்து 6 மாதங்களுக்குள் தேர்தலுக்கான அறிவிப்பை விடுவதற்கான இயலுமை என்னிடமிருந்தது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டத்தினால்தான் இத்தேர்தல் காலதாமதமாகியுள்ளது. அதற்கு புதிய அரசாங்கத்தை குறைகூறுவதிலும் நியாயமில்லை' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X