Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பெய்ஜிங்கிலிருந்து ஏ.பி.மதன்
துறைமுக நகரத்திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் சீன அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் ஒருமித்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
சீன ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் அமுனுகம மேற்படி தெரிவித்தார்.
'துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் பின்பற்றப்படாமலிருந்து சில சில சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, விரைவில் துறைமுக நகரத் திட்டத்தினை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீன ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட சீன ஜனாதிபதி, தனது மகிழ்ச்சியினையும் தெரிவித்தார்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
'சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்காக சீன அரசாங்கம் பாரியளவு அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்கவுள்ளது. அதேபோல், 600 புலமைப்பரிசில்களை இலங்கை மாணவர்களுக்கு வழங்க, சீன அரசாங்கம் முன்வந்திருக்கிறது.
பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை இலங்கைப் படையினருக்கு வழங்குவதற்கும் சீன அரசாங்கம் முன்வந்திருக்கிறது' எனவும் அமைச்சர் சரத் அமுனுகம மேலும் தெரிவித்தார்.
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago