2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தொழிலாளர்களை அடமானம் வைக்க முடியாது

Niroshini   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ஆ.கோகிலவாணி

“தனிப்பட்ட கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்காக அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களை அடமானம் வைக்க முடியாது. தொழிலாளர்களுக்கு அநீதியிழைக்க கடுகளவேனும் அனுமதிக்க மாட்டேன். இனி எந்த பேச்சுவார்;த்தையிலும் கலந்துகொள்ள போவதில்லை” என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையாக கூறப்பட்ட பேச்சுவார்த்தை, நேற்று வியாழக்கிழமை தொழில் அமைச்சில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் பிரதான தொழிற்சங்கங்களில்  இலங்கைத் தொழிலாள் காங்கிரஸ் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன பங்கேற்றப் போதிலும் இலங்கைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் இப்பேச்சுவார்த்தையை புறக்கணித்திருந்தது.

இவ்விடயம் தொடர்பில் தொடர்புக்கொண்டு கேட்டப்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“கடந்த பேச்சுவார்த்தை ஓரளவு முன்னேற்றகரமாக இருந்ததது. எனவே, அடுத்த நிகழ்வாக கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்க வேண்டும். அதற்கிடையில் மீண்டுமொரு பேச்சுவார்த்தை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் நான் கலந்துகொள்ளவில்லை. இனி என்ன நடந்தாலும் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடுவதிலே நான் பங்கேற்பேன்.

மலையகத்தை பிரதிநித்துவப்படுத்தும் 9 தலைவர்களை 48 நாட்களில் தெரிவு செய்த மக்களுக்காக சேவையாற்றாமல் ஒன்றரை வருடங்களாக அம்மக்களை இழுத்தடிப்பதில் எவ்வித நியாயமுமில்லை. இது தனிப்பட்டக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்காக இழுத்தடிக்கப்படுவதாகவே நான் கருதிறேன். எனவே, அம்மக்களுக்கு துரோகமிழைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .