Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 நவம்பர் 30 , மு.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, நாட்டுக்குள்ளும் வெளியேயும் இருக்கின்ற தீவிரவாதக் குழுக்களே வதந்திகளைப் பரப்புகின்றன என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்படுகின்ற சில குழுக்கள், நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறான வதந்திகளை பரப்பிவருகின்றன என்றும் அவர் கூறினார்.
நம்பவேண்டாம். ஒரு நாட்டின் பிரஜையொருவர், இனம் மற்றும் மத பேதங்கள் இன்றி, அவர்களின் வைபவங்கள் நடத்துவதற்கும் மற்றும் நினைவுகூர்வதற்கும் இடமிருக்கின்றது. அவ்வாறானவற்றை பலவந்தமாக நிறுத்துவதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் அவ்வாறானவற்றுக்க இடையூறு விளைவிக்கும் வகையிலும் அரசாங்கம் செயற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான செயற்பாடுகளுக்கு மத்தியில் அனைவரினதும் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்குமாறும் பொலிஸாருக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
46 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
3 hours ago