2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

‘நாட்டை முடக்க மாட்டேன்’

Editorial   / 2021 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் வியாபித்திருக்கும் நிலையில், நாட்டை முழுமையாக முடக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலைமையை கவனத்தில் எடுத்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பணித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற கொவிட-19 ​தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

“கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. எனினும், நாட்டை மூடிவதற்கான இயலுமை இல்லை” என்றார்.

ஏற்பட்டிருக்கும் நிலைமை தொடர்பில் ஆகக் கூடுதலான அவதானத்தை செலுத்தி, தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .