2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் கைது

Editorial   / 2025 நவம்பர் 06 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் வியாழக்கிழமை (06)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்பின் போது தொல்பொருள் சின்னமாக அடையாளம் இடப்பட்டிருந்த பகுதி சேதமாக்கப்பட்டதால் சாரதிகள் இருவர் பொலிஸாரால், புதன்கிழமை (05) அன்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைக்காக துறைசார் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம்  யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெயரில்.நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (06) மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படுத்தியிருந்தனர்.

குறித்த சந்தேக நபர்களை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் நீதிமன்று விடுவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X