Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 29 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூப் புனித நீராட்டு விழா ஒன்றில் நடனமாடிய இளைஞர் ஒருவர் பிடரி அடிபட விழுந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பல்லகட்டி, பண்டத்தரிப்பைச் சேர்ந்த அன்ன ராசா அலக்சன் (வயது 19) என்பவராவர்.
மேற்படி இளைஞர் மல்லாகம் நரியிட்டால் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றில் இடம் பெற்ற பூப் புனித நீராட்டு விழாவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கலந்து கொண்டுள்ளார். அப்போது நள்ளிரவு 11. 40 மணியளவில் அவர் உணவருந்திக் கொண்டிருந்த போது ஒரு பாடலுக்கு அருந்திய உணவை வைத்துவிட்டு நடனமாடியுள்ளார். அவ்வாறு ஆடிய போது தலைப்பகுதியின் பின்பக்கம் நிலத்தில் அடிபட விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை தெல்லிப்பளைப் பொலிஸார் நெறிப்படுத்தினர். சடலம் யாழ். போதனா வைத்தியசலை கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .