2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நடவடிக்கை எடுக்க வேண்டும்:ஊழலுக்கு எதிரான முன்னணி

Kanagaraj   / 2016 மே 11 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பனாமா ஆவணங்கள்' அம்பலப்படுத்திய பட்டியலிலுள்ளோர், உரிய வரிகளைச் செலுத்தியுள்ளனரா என ஆராயப்பட வேண்டுமெனவும், வரிகள் செலுத்தப்படவில்லை எனக் காணப்படின், அந்தப் பணத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், ஊழலுக்கு எதிரான முன்னணி, நேற்று (10) கோரியுள்ளது.

அண்மையில், பல மில்லியன் டொலர்கள், இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. மத்திய வங்கி, இந்தப் பணத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஊழலுக்கு எதிரான முன்னணியின் செயலாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறினார். 'ஊழல் விசாரணைகளையிட்டு, நாம் திருப்தியடையவில்லை' என அவர் கூறினார்.

வெளியிடப்பட்ட பனாமா ஆவணங்களில், வெளிநாட்டுக் கணக்குகள் 22ஐ வைத்திருந்த இலங்கையர்கள் 19 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெளிநாட்டுக் கணக்குகளை முன்னர் வைத்திருந்த இலங்கையர்கள் 42 பேரின் பெயர்களை வெளியிட்டன.

இவ்வாறாக, வெளிநாட்டுக் கணக்குகள் 65ஐ வைத்திருக்கும் இலங்கையர்கள் 60 பெயர்களும் 51 விலாசங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையர்கள், வெளிநாட்டுக் கணக்குகளை வைத்திருப்பது சட்டவிரோதமானதல்ல. இருப்பினும், வெளிநாட்டுக் கணக்கு வைத்திருப்போர், மத்திய வங்கிக்கு அறிவித்தும் வரிகளைச் செலத்தியும் இருக்கவேண்டும்.

எனவே, இந்த நிபந்தனைகளுக்கு அமையாது வெளிநாட்டுக் கணக்கு வைத்திருப்போர் மீது, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அம்முன்னணி கூறியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X