Editorial / 2017 நவம்பர் 24 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை, ஒன்றிணைந்த எதிரணி, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று (23) கையளித்துள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் கையெழுத்திட்டே, அந்தப் பிரேரணையைக் கையளித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் தலைமையிலான உறுப்பினர்களே, அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலமாதமாகுவதற்குரிய பொறுப்பை விடயத்தானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஏற்கவேண்டும் என்றும், அவருடைய அசமந்தப் போக்குக் காரணமாக நம்பிக்கை இழந்துள்ளதாகவும் அந்தப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜே.வி.பியும், அமைச்சர் பைஸருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை இன்றைய தினம் (24) சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago