2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

நிர்மாணக் கைத்தொழில் துறையினருடன் ஜனாதிபதி சந்திப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 13 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்மாணக் கைத்தொழில் சார்ந்த தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று  (12) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நிர்மாணச் சேவைகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள், மின்சார கேபிள்கள் ஏற்றுமதியிலிருந்து பொருளாதாரத்திற்கு பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தத் துறையை ஏற்றுமதித் துறையாக வளர்ப்பதில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், முன்மொழிவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது.

அரசாங்க நிர்மாணங்களுக்கு அப்பால் நிர்மாணக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான பொருளாதார சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக  சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த நாட்டில் நிர்மாணத் துறையில் ஏற்பட்ட ஒழுங்கற்ற தன்மை காரணமாக கடந்த காலங்களில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதனை ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிர்மாணத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க அரசாங்கம் எவ்வாறு தலையிட முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

தற்போது நிர்மாணத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து துறைசார் பிரதானிகள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .