Simrith / 2025 ஜூன் 09 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பொது நூலகத்தின் பெண் அதிகாரி ஒருவர் தனது கைப்பையில் சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறி 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, குறுந்துவத்த பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கொழும்பு பொது நூலகத்தில் பணிபுரியும் பெண் உதவி அதிகாரி ஒருவரின் கைப்பையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 119 அவசர தொலைபேசி எண்ணுக்கு தவறான தகவலை வழங்கியதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் நூலகத்திற்குச் சென்று, அந்த அதிகாரியின் கைப்பையை ஆய்வு செய்தனர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது போதைப்பொருள் எதுவும் அவரிடம் இல்லை என்று அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தனக்கு பெரும் அவமானத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக மனுதாரர் கூறினார். எனவே உடனடி விசாரணை நடத்தி நீதியை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025