2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘நள்ளிரவு முறை பொருத்தமற்றது’

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறும் பாடசாலை சார்ந்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை, நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை மிகமோசமானதொரு செயற்பாடு என, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விமர்சித்துள்ளது.  

13 ஆண்டுகாலம் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து, பரீட்சை எழுதி பெறுபேற்றை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மாணவர்களின் பெறுபேறுகளை பொருத்தமில்லாத நேரத்தில் அதுவும் நடுநிசியில் வெளியிடும் நடைமுறை இலங்கையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ள அந்தச் சங்கம், இது கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி, கல்வி உளவியல் சார்ந்த கல்வியியலாளர்களும், பெற்றோர்களும்கூட தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.  

இலங்கையில் மாணவர் சார்ந்த பரீட்சைப் பெறுபேறுகளை, நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை ஏன் பின்பற்றப்படுகின்றது என்பதனை பலர் வினாவாக பல ஆண்டுகள் முன்வைத்தும், விடை தெரியாமல் உள்ளனர். இலங்கையில் பொருட்களின் விலைமாற்றம் உட்பட பல வெளியீடுகள் நடுநிசியிலேயே அறிவிக்கப்படுகின்றன. இதற்கான காரணத்தை மக்கள் பிரதி நிதிகளாக நாடாளுமன்றத்தில் உள்ளவர்களும் அங்கிகரிப்பது வேதனையான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .