Freelancer / 2025 டிசெம்பர் 12 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை - நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில் மீண்டும் மண்மேடு சரிந்து வீதி தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாவட்ட செயலாளர், நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாகத் தொடர்ந்தும் வீதிகளில் மண்மேடுகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
'திட்வா' புயலினால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத சில தரப்பினர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.R
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago