Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மாலைத்தீவு விஜயத்தின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளைய தினம் (02) மாலைத்தீவுக்கு செல்லவுள்ளார்.
பிரதமர் நாடு திரும்பியதுமன், ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதியான தீர்மானத்தை எடுக்கும் என, அக்கட்சியின் சிரேஷ்ட் அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 5ஆம் திகதி நாடு திரும்பவுள்ள நிலையில், 6ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்று (31) ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago