2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை

Editorial   / 2020 மே 20 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை வீழ்ச்சி இன்று (20) பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அம்பன் சூறாவளி வட கிழக்காக நாட்டைவிட்டு நகர்ந்துசெல்வதுடன் பிற்பகலில் பங்களாதேஷின் மேற்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

களு, கிங் மற்றும் நில்வளா கங்கைளின் நீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் சுகீஸ்வர பண்டார கூறியுள்ளார்.

இந்த நிலையில், தென், மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்திருக்கின்றார்.

கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (21) பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .