2025 மே 02, வெள்ளிக்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

Freelancer   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
அந்தப் பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 
 
அத்துடன், மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .