J.A. George / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நாட்டின் உள்ளக பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வீரசேகர கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் கூட போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகள் தலைதூக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பணியில் இருக்கும் போது ஒரு பொலிஸ் அதிகாரி இறந்தால், அவரின் பதவிக்காலம் முடியும் வரை முழு சம்பளத்தையும் அவரது குடும்ப உறுப்பினருக்கு வழங்குவதற்காக, அமைச்சரவை பத்திரமொன்றை தயாரிக்க அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளுடன் காணொளி ஊடாக மேற்கொண்டு சந்திப்பில் இந்த விடயங்களை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .