Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 ஜனவரி 17 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைவதால் நாட்டில் பாரிய மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாளாந்தம் நான்கு மணித்தியால மின்வெட்டுக்கு தயாராக இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்வதாக சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவாடு தெரிவித்தார்.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு 3,000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபையிடம் கைவசம் இருப்பதாகவும், உலைகளுக்கான எண்ணெய் 22 நாட்களுக்கு மட்டுமே போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன்அடிப்படையில், மூன்று நாட்களுக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டித்து, கேள்வியைக் குறைக்க வேண்டும் என்றும் இல்லாவிடின் மின் நிலையங்களின் சமநிலையை பராமரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள நீரானது முதன்மையாக விவசாயம், குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் நோக்கங்களுக்காக நிர்வகிக்கப்படுவதால் நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் மின் உற்பத்திக்கு நீர் பயன்படுத்தப்படுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அங்கீகரிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் இரத்துச் செய்யப்படுவதனால், திடீர் மின் தடை ஏற்பட்டால் மின்சாரத்தை வழங்கக்கூடிய மாற்று மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டில் இல்லை என தொழிற்சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago