Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது காணப்படும் அமைதியான நிலையை தொடர்ந்து பேணுவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ராகமையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இராணுவ தளபதி, இன்று (04) இதனைக் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர், நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பான நிலை தற்போது சிறந்த நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ்வதற்கு தேவைான சூழ்நிலையை பெற்றுக்கொடுப்பதற்கு பொலிஸார் மற்றும் முப்படைகளும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
12 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago