S.Renuka / 2026 பெப்ரவரி 19 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஏப்ரல் 02ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (19) அன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா முர்ஃபுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் ரக்பியை ஊக்குவிப்பதாக தெரிவித்து இந்திய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாவை தவறாகப் பயன்படுத் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் பூரண விசாரணைக்கென தினத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் கோரிக்கை விடுத்தார்.
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago