2026 மார்ச் 23, திங்கட்கிழமை

நிதிச் சீராக்கல் சட்ட மூலத்தில் திருத்தங்கள்

Freelancer   / 2021 ஜூலை 28 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்தில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்றும் சட்டமூலத்தின் இறுதி வரைவு,  நீதிமன்றத்தில்  நாளை சமர்ப்பிக்கப்படும் என்றும் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்தில் இன்று (28) அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைத்த சட்டமூலத்துக்கு எதிராக் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி நிர்மலன் விக்னேஷ்வரன், சட்டமூலத்திலுள்ள 7 சரத்துக்களைத் திருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்றுக்கு அறிவித்தார். 

குறித்த மனுகள், பிரியந்த ஜயவர்தன, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜூலை 29 ஆம் திகதி பராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்த நிதி சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற, முழு அல்லது பகுதியான பொதுசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரம் தேவைப்படுவதுடன், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது என்று மனுதாரர்கள் மனுக்களில் சுட்டிக்காட்டிள்ளனர்.
 
இந்த சட்டமூலத்தின் நோக்கம் வருமானவரி சட்டங்களின் கீழ் பல்வேறு வகையான வரிகளை மோசடி செய்த நபர்களுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்குவதாகும் என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .